Tuesday, May 22 2018

athirvu

லண்டனில் இசைப் பிரியா: நீதிகேட்டு நிற்கிறார் நாம் என்ன செய்யப் போகிறோம்

May 12, 2018    17005

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(20ம் திகதி) மதியம் 12.30 மணிக்கு, 18.5.2009 என்னும் முழு நீள கொலிவுட் திரைப்படம் லண்டனில் காண்பிக்கப்பட உள்ளது. இதில் ஆனந்தபுர இறுதி அடிபாடு, முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகள் மற்றும் ஊடகப் போராளி இசைப்பிரியாவுக்கு என்ன நடந்தது என்பது போன்ற பல கட்டங்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இசைப் பிரியா மட்டுமல்லாது, கொல்லப்பட்ட அனைத்து மக்களின் சோகங்களையும் சுமைகளையும் சித்தரிக்கும் முழு நீள கொலிவுட் திரைப்படமாக அமைந்துள்ளது இந்த 18.5.2009. இதுவே இப்படத்தின் பெயர் ஆகும்(அதாவது 18.5.2009) அனைவரும் இதனை பார்க்கவேண்டும். இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகறியச் செய்யவேண்டும், என்று ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எனவே அனைத்து மக்களும் இத்திரைப்படத்தை பார்க்க திரண்டு வரவேண்டும். லண்டன் ஹரோவில் உள்ள சபாரி சினிமா தியேட்டரில் சனிக் கிழமை(19) வி.ஐ.பி காட்சிகள் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும். பொதுமக்களுக்கான காட்சி ஞாயிறு(20ம் திகதி) மதியம் 12.30 க்கு ஆரம்பமாக உள்ளது. அனைவரும் வருக.