Tuesday, May 22 2018

athirvu

'மே-18' நினைவேந்தல் ஒரே நிகழ்வாக பல்கலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெறும்..

May 14, 2018    2800

'மே-18' நினைவேந்தல் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக பல்கலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (13.05.2018) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,

முள்ளிவாய்க்கால் மே-18 நிகழ்வை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம், அந்தவகையில் இன்று ஒன்றிணைக்கவுள்ள தரப்புக்களுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் சந்திப்பினை ஏற்படுத்துவதற்காக வந்திருக்கின்றோம். அனைத்து தரப்புக்களுடனும் கலந்துரையாடிய வண்ணம் தொடர்ச்சியாக அவர்களின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒற்றுமையாக ஒன்று சேர்த்து கொண்டு நடத்த இருக்கின்றோம்.

அந்த வகையில் வடக்கு மாகாணசபையினர் சந்திக்க இருந்தார்கள், அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லை சி.வி.கே.சிவஞானம் மற்றும் து.ரவிகரன் ஆகியோரிடம் தொடர்புகொள்ள முயற்சித்தோம் அவர்கள் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை, இந்நிலையில் ஏனைய பொது மற்றும் கிராமிய அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எம்முடன் சேர்ந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் முன்வந்துள்ளார்கள்.

எந்தவித குழப்பமும் இன்றி இந்த நினைவேந்தல் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக பல்கலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றறோம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் தெரிவித்துள்ளார்.