Tuesday, May 22 2018

athirvu

தில்லுமுல்லு, விஷால் பற்றி ராதா ரவி ஆவேச பேச்சு.!

May 14, 2018    1925

நேற்று சென்னையில் ராதா ரவி, பாரதி ராஜா, ராஜன் என பல தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி பேசி செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறியுள்ளனர்.

யார் யார் என்னென்ன பேசினார்கள் என்ற விவரங்கள் பின் வருமாறு

தயாரிப்பாளர் சங்கம் தமிழர்களின் கைகளில் வர வேண்டும் - பாரதிராஜா

லைகா தான் தமிழ் ராக்கர்ஸ் என தயாரிப்பாளர் பிரிமுஸ் குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முறையற்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் தேர்தல் அறிவித்து முறையான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் -ராஜன்

ராதாரவி கூறியதாவது

ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்வேன் என கூறி உள்ளனர். ஆனால் இன்று எதையும் நிறைவேற்றவில்லை்

அவருடைய படத்தை பெரிய திரையங்கில் வெளியிட்டுள்ளார் கேட்டால் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்வில்லை என்கிறார்.

இப்படிப்பட்ட தில்லுமுல்லு அமைப்பு தேவையா?

தன்னுடைய படம் மட்டும் ரீலிஸாக வேண்டும் மற்றவர்களின் படம் ரீலிஸாக கூடாது என்ற சமயத்தில் இப்படி கேள்வி வரும். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.