Tuesday, May 22 2018

athirvu

கேட்கும் திறன் பாதிப்புகளை குறைக்கும் பெண்களின் டயட்..

May 14, 2018    1315
அமெரிக்காவில் உள்ள பிரிங்காம் பெண்கள் மருத்துவமனை கடந்த 22 ஆண்டுகளாக 70,966 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அவர்களின் டயட்டில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டன. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், குறைந்த கொழுப்புசத்து கொண்ட பால் பொருட்கள் மற்றும் குறைந்த அளவு ஆல்கஹால் கொடுக்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான உணவுகள் உண்ட பெண்களின் கேட்கும் திறன் பாதிப்புகள் 33 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை ஒப்பிடும் போது ஆரோக்கிய உணவுகள் எடுத்துக்கொள்ளாத பெண்களின் காது கேட்கும் திறன் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து பேசிய பிரிங்காம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர் ஷரண், 'நல்ல உணவுகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, காது கேட்பதில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது' என குறிப்பிட்டார்.