Tuesday, May 22 2018

athirvu

நவாலிப் படுகொலையில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி..

May 15, 2018    865

தமிழ் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நவாலிப் படுகொலையில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வு, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

தமிழ் இனப்படுகொலை காலக்கோட்டிலே நவாலிப் படுகொலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1995ஆம் ஆண்டு முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையின்போது வலிகாமம் மேற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் யாழ் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு சென்றுகொண்டிருந்த மக்கள் நவாலிப் பகுதியிலுள்ள சென் பீற்றர் தேவாலயத்திலும் அருகிலுள்ள சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இதன்போது தீவகத்தின் பக்கமிருந்து வந்த, ஸ்ரீலங்கா வான்படைக்கு சொந்தமான புட்காரா ரக விமானம் நவாலி சென் பீற்றர் தேவாலயத்தின்மீது குண்டுகளைப் போட்டது.

இந்த தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.