Tuesday, June 19 2018

athirvu

சுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர்..

May 22, 2018    3835

தமிழ் சினிமாவில் முகம் தெரியாத நடிகையாக இருந்து வந்தவர் சுஜா வருணீ. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியில் கலந்து கொண்டாலும் இறுதி வரை வீட்டில் இருந்து வந்தார். அப்போதே தன்னுடைய அத்தானை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் சுஜாவும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவகுமாரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் எனவும் புகைப்படத்துடன் ஒரு தகவல் வைரலாகி இருந்தது.

ஆனால் சுஜா வருணீ என்னுடைய திருமணத்தை பற்றி நானே அறிவிப்பேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என கூறியிருந்தார். தற்போது சிவகுமார் சுஜா வருணியும் நானும் பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் பிக் பாஸ் வீட்டில் அவர் அத்தான் என குறிப்பிட்டது என்னை தான் எனவும் கூறி ஒரு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் எங்களது திருமணத்தை பற்றி நாங்களே அறிவிக்கிறோம். இதை பெரிதாக்க வேண்டாம் எனவும் ஷிவா கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர் ஒருவர் கடைசியில் உண்மை இது தானா என கேட்க சுஜா வருநீ ஆமாம் என பதிலளித்துள்ளார்.

 


Loading...