Tuesday, June 19 2018

athirvu

அப்பா போக்க மேன் விளயாட சாவில் இருந்து மகனை காப்பாற்றிய பக்கத்து வீட்டு இளைஞர்

May 29, 2018    16705

இன்றைய தேதிக்கு பிரான்ஸ் பாரிஸ் நகரில், அதிகம் பேசப்படும் ஒரு நபர் உள்ளார். மாம டூ என்னும் 22 வயது இளைஞர், சில நொடிகளில் 4 மாடி தாவி. அங்கே தொங்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சிறுவனை ஒரு ஸ்பைடர் மேன் போல காப்பாற்றியுள்ளார். குறித்த சிறுவனது அப்பா வீட்டில் போக்க மேன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அச்சிறுவன் பல்கனியில் இருந்து கீழே விழுந்துள்ள நிலையில், ரி ஷேட் ஒரு கம்பியில் மாட்டி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளான்.

இதனை கீளே 1ம் மாடியில் இருந்து பார்த்த அந்த இளைஞர், 4 மாடிகள் தாண்டி மேலே சென்று அந்தச் சிறுவனை நொடிப் பொழுதில் காப்பாற்றி உள்ளார். இதனை யாரோ வீடியோ எடுத்துள்ளார்கள். இது பிரான்ஸ் மட்டும் அல்ல , பல நாட்டு தொலைக் காட்சிகளில் வெளியாகி, அவரை நிஜ ஹோரோவாக பலர் பாராட்டியுள்ளார்கள். இது கதை அல்ல நிஜம்.

பிந்திய செய்தி::::::::::: குறித்த இளைஞருக்கு பிரான்சில் விசா இல்லை. அவர் அகதி அந்தஸ்த்து கோரி நிராகரிக்கப்பட்ட நபர். ஆனால் அவரது வீர செயலை பாராட்டிய பிரான்ஸ் நாட்டு அதிபர். அவருக்கு உடனே விசா வழங்குமாறு உள்துறை அமைச்சருக்கு பணித்துள்ளார். ஏன் என்றால் , இந்த இளைஞர் சமூக அக்கறை உள்ளவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்...


 


Loading...