Tuesday, June 19 2018

athirvu

ரசிகர்களின் செல்பி மோகத்தால் விராட்கோலியின் காது உடைந்தது.!

Jun 09, 2018    555

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள விராட்கோலியின் மெழுகுசிலை முன்பு ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது, மெழுகு சிலையில் சேதம் ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில், விளையாட்டு, கலைத்துறை, அரசியல் உள்ளிட்டபல துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு மெழுகுசிலை அமைக்கப்படும். அந்த வரிசையில் இந்தியஅணியின் கேப்டன் விராட்கோலிக்கு நேற்று முதல் மெழுகுசிலை வைக்கப்பட்டது. அதனை காண்பதற்காக நேற்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அப்பொழுது சிலையுடன் இணைந்து ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்தது. இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் சிலையை அங்கிருந்து அகற்றி பழுது பார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு ஏற்கனவே அங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Loading...