Tuesday, June 19 2018

athirvu

நான் கொல்லப்படலாம் - வட கொரிய அதிபர் வெளியிட்ட பகீர் தகவல்..

Jun 10, 2018    3475

உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி கடந்த சில ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனைகள் பலவற்றை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவுக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்த போதிலும் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது வட கொரியா.

இந்த நிலையில், சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்ட நிலையில், அணு ஆயுதங்களை அழிக்கும் முயற்சிக்கு கிம் ஜாங் உன் ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசவுள்ளனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் வைத்து தன்னை கொலை செய்யும் முயற்சி நடக்கலாம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அச்சம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பினை கிளப்பியுள்ளன.

 


Loading...