இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 11 கோடி ரூபா தங்கத்தினை கடத்திய பெண்…. விமான நிலையத்தில் அதிரடிக் கைது!!!

இந்த செய்தியை பகிர

சென்னையிலிருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் பெண்னொருவர் 11 கோடிக்கு மேற்பட்ட தங்க நகைகளை இலத்திரணியல் கடனட்டை வடிவிலும், வேறுபட்ட நகை வடிவிலும் கொன்டுவந்தபோது கட்டுநாயக்கா விமாநிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் துபாயிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்து அங்கிருந்து இலங்கை வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுச் செய்யப்பட்டவர் 30 வயதுடைய ஹம்பகா பிரதேசத்தினைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவரிடமிருந்து 6.5 கிலோ எடையுள்ள தங்கத்தினால் செய்யப்பட்ட 24 கடனட்டைகளும், அதிகளவிலான வளையல்களும், மோதிரங்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணையினை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர