இந்த முழு பிரபஞ்சத்தில் மிக அதிசயமானது மனித மூளை விஞ்ஞானிகள் சொல்வது என்ன தெரியுமா ?

இந்த முழு பிரபஞ்சத்தில் மிக அதிசயமானது மனித மூளை விஞ்ஞானிகள் சொல்வது என்ன தெரியுமா ?

இந்த முழு பிரபஞ்சத்தில் சுமார் 86 பில்லியன் பால் வெளிக் கூட்டம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் மனித மூளையை எடுத்துக் கொண்டால் அதில், 86B பில்லியன் நரம்புகள் உள்ளது. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அவை வேலை செய்யும் விதம். தகவலைப் பரிமாறும் முறை என்பது, இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை. அந்த அளவு ரகசியங்களைக் கொண்டது மூளை.

சில விடையங்கள் GM என்று சொல்லப்படும் ஜெனட்டிக் மெமரி(genetic memory) என்கிறார்கள். அதாவது சில விடையங்களை, எமது அப்பா அம்மா அல்லது எமது மூதாதையரிடம் இருந்து பதிந்து வைத்துள்ளது மூளை. உதாரணமாக முன்னர் ஒருபோதும், விபத்தில் சிக்காத ஒரு நபர். விபத்தில் சிக்கி ரத்தப் போக்கு அதிகமானால். உடனே மூளை தானாகவே நாடி நாளங்களை சுருக்கி. ரத்த அழுத்தத்தை தானாகவே சீர் செய்யும். எமது பாட்டி, அல்லது தாத்தா அடிக்கடி விரும்பி உண்ணும் உணவுகள். அவை மூளையில் பதிவதால், மூளை தயாரிக்கும் ஒரு திரவம் ரத்தத்தில் கலந்து. அது மரபணுவோடு இணைந்து அடுத்த தலை முறைக்குச் செல்கிறது. இதனால் அடுத்த தலைமுறையில் பிறக்கும் சில குழந்தைகள், தமது பாட்டி அல்லது தாத்தா உண்ட உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதும் உண்டு.

இதுபோல யாருமே எண்ணிப் பார்க்க முடியாத அளவு பல வேலைகளைச் செய்ய வல்லது மூளை. மூளையில் காணப்படும் அல்லது நியூரோன் என்று அழைக்கப்படும் வலைப் பின்னலில், ஏற்படும் சிறிய சிறிய மின்சாரம் மின்னல் வேகத்தில் செல்வதால், தகவல்கள், யோசனைகள், முடிவுகள் என்று பல முடிவுகளை மூளை மின்னல் வேகத்தில் எடுக்கிறது. இந்த வலை அமைப்பின் திறன் அதிகமாக இருக்கும் நபர்கள், புத்திசாலியாக இருக்கிறார்கள். இதும் பரம்பரை இயல்புகளே. மேலும் தாய் தந்தை முற்றாக அறிவிலிகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிறந்த குழந்தை புத்திசாலியாக இருக்கும். இதற்கும் பரம்பரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்னவென்றால்…

குறித்த அந்தக் குழந்தை அப்பா அல்லது அம்மாவின் அம்சங்களைக் கொள்ளாமல், மூதாதையர்களின் அம்சத்தை கொண்டிருக்கும். இதனால் அக் குழந்தை மாறு படுகிறது. இவ்வாறு இந்த முழு அண்டவெளியையும் பார்க்க, மிகவும் ஆச்சரியமான விடையம் மனித மூளை தான் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.