ஹமாஸ் இயக்கத்தை அடியோடு அழிப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் நுளைந்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் ஹமாஸ் இயக்கம் பலமான எதிர்தாக்குதலை நடத்தியதால், அவர்கள் பின்வாங்க நேரிட்டுள்ளது. ஆனால் மேற்கு உலக ஊடகங்கள் அனைத்தும், இஸ்ரேல் பெரும் வெற்றி பெற்று வருவதாக உல்டா விட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் ஹமாஸ் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் என்று மேற்கு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. இதேவேளை…
ரஷ்ய அதிபர் புட்டின், ஹமாஸ் இயக்க தலைவர்களோடு பேசியுள்ள விடையம் மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துள்ள நிலையில். காசா பகுதியில் வைத்து, இஸ்ரேல் படைகளை பழி வாங்க ரஷ்யா முனைப்புக் காட்டி வருகிறது. இஸ்ரேல் படைகளை வழி நடத்துவது அமெரிக்கப் படைகள். இதனால் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் புகட்டவே இந்த 3 நாடுகளும் தற்போது கை கோர்த்துள்ளது.