
நடிகை எமிஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…….
2010 ல் தமிழில் வெளியான “மாதராசப்பட்டினம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதற்கு முன்பு மடலிங் துறையில் இருந்தார். 2012 ல் “ஏக் தீவானா தா” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் விக்ரமுடன் இணைந்து “தாண்டவம்” படத்தில் நடித்துள்ளார்.
2014 ல் “வேடு” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்தார். 2015 ல் “சிங் இஸ் பிளியிங்” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தொடர்ந்து தமிழில் தெறி, தங்கமகன், கெத்து, தேவி, படங்களில் நடித்துள்ளார். 2018 ல் “போகி மேன்” என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.
பின் 2018 ல் 2.0 என்ற படத்தில் தமிழில் இறுதியாக நடித்தார். அதன் பின் தமிழில் நடிக்கவில்லை. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அடிக்கடி தன் மகனுடன் புகைப்படம் எடுத்துப் பதிவுசெய்கிறார். அந்த வகையில் தற்போது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து குஷியாக உள்ளார்.


