சிங்கிள் ஆளாக நின்று M25 சாலையை மூட வைத்த Just-Stop-Oli போராட்டக் காரர்- அடுத்த அழிவு பிரித்தானியாவுக்கு – athirvu news

சிங்கிள் ஆளாக நின்று M25 சாலையை மூட வைத்த Just-Stop-Oli போராட்டக் காரர்- அடுத்த அழிவு பிரித்தானியாவுக்கு

வட்டி வீதம் அதிகரிப்பு, வாழ்கைச் செலவு, உணவு விலை அதிகரிப்பு என்று சொல்ல முடியாத பெரும் துயரில் பிரிட்டன் நடுத்தரவர்க மக்கள் உள்ளார்கள். போதக்குறைக்கு Just Stop Oil- என்னும் போராட்டக் குழு வீதியில் இறங்கி, அரசுக்கும், பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் பெரும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கடலில் உள்ள வளங்கள் அழிகிறது. இதனால் மனித இனமே அழிய உள்ளது. எனவே கடலில் இருந்து, மசகெண்ணையை தோண்டி எடுக்க வேண்டாம் என்பது இந்த போராட்டக் காரர்களின் நோக்கமாக உள்ளது.

அவர்கள்  சொல்வது எல்லாம் உண்மை தான். அவர்கள் போராட்டமும் நியாயமானது தான். ஆனால் அது நடை முறைக்கு சாத்தியமா ? இந்த நவீன உலகில் பெற்றோல் இல்லை என்றால் என்ன நடக்கும் ? எதுவுமே இயங்காது. ஆனால் போராட்டக்காரர்களுக்கு இது புரியவில்லை. ஆங்காங்கே வீதிகளை மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்துகிறார்கள். நேற்றைய தினம்(10) M25 நெடுஞ்சாலையின், அறிவிப்பு பலகை மீது ஒருவர் ஏறி நின்று போராடியதால், மணித்தியாலக் கணக்கில், சாலை மூடப்பட்டது. இந்த பைத்தியம் பிடித்த போராட்ட நபர்களுக்கு ஒன்று புரியவில்லை.

இவர்கள் பாதையை மறிக்க, ஆயிரக் கணக்கான வாகனங்கள்,  அங்கே நெரிசலில் தரித்து நிற்க்க. அந்த வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மேலும் சுற்றுப் புறச் சூழலைப் பாதிக்கிறது. இவர்கள் மறிக்கவில்லை என்றால், குறித்த வாகனம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து இருக்கும் அல்லவா. ஏன் மணித்தியாலக் கணக்காக வீதியில் நின்று, பெற்றோலை எரித்து கார்பன்டை ஆக்சைட்டை வெளியே விட வேண்டும் ? அது போக…

9 பொலிசார் சேர்ந்து ஏறி நின்ற ஆளை பார்த்து கொட்டாவி விட்டது தான் மிச்சம். ஏறி அவரை பிடித்து கீழே இறக்க துப்பில்லை. வெள்ளி பார்கச் சென்ற வெங்காயம் போல நின்று வேடிக்கை பார்த்தார்கள். அதிலும் தீ அணைக்கும் படை பின்னர் வந்து தான் அவரை கீழே இறக்கி உள்ளார்கள். அது வரை மணித்தியாலக் கணக்கில் M25ல் வாகனங்கள் அசையவே இல்லை.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்