சொந்த அப்பாவையே பார்க்க முடியாமல் திண்டாடும் இளவரசர் ஹரி- லண்டனில் நடக்கும் நாடகம்

சொந்த அப்பாவையே பார்க்க முடியாமல் திண்டாடும் இளவரசர் ஹரி- லண்டனில் நடக்கும் நாடகம்

அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து, லண்டன் வரும் இளவரசர் ஹரி அப்பா சார்ளஸை சந்திக்க எடுத்த அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியடைந்துள்ளது. மன்னர் சார்ளஸ் அடுத்த வாரம் மிக மிக பிசியாக இருப்பார். அதனால் அவரை சந்திக்க முடியாது, என்று அரண்மனை வட்டார அதிகாரிகள் இளவரசர் ஹரிக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. என்ற

Invictus Games என்று அழைக்கப்படும் ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டி இது. இந்த விளையாட்டுப் போட்டி ஆரம்பம்பிக்கப்பட்டும் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில். அதற்கான பிரார்த்தனை ஒன்று, செயின்ட் போல்ஸ் கதீரியல்(சர்ச்) இடம்பெற உள்ளது. இளமைக் காலத்தில்( மெகானை திருமணம் முடிக்க முன்னர்) இளவரர் ஹரி, இந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனத்தை செலுத்தி, மக்கள் மத்தியில் இதனை பிரபல்யம் ஆக்கினார்.

அந்த வகையில் அவரை அழைக்க வேண்டும் என்று கருத்திய அதிகாரிகள், ஹரிக்கு அழைப்பை விடுத்தார்கள். லண்டன் வரும் இந்தச் சாக்கில் அப்பாவையும் ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று கணக்குப் போட்டுள்ளார் ஹரி. ஆனால் அரச குடும்பத்தை பற்றி இவ்வளவு இழிவாகப் பேசி விட்டு, பின்னர் எப்படி என்னை வந்து பார்க்க , ஹரி முனைகிறார் என்று நினைத்திருப்பார் மன்னர் சார்ளஸ். அதுவும் நியாயம் தானே ?