நியூசிலாந்தில் காலில் பட்ட அடி.. கண்டுக்காமல் விட்டதால் அப்பாசுக்கு நேர்ந்த கதி…

Spread the love

காதல் தேசம் முதல் கொண்டு பல தமிழ் சினிமாவில் நடித்தவர் அப்பாஸ். 90களில் காதல் இளவரசன். தமிழக பெண்களின் கணவுக் கண்ணன். அதன் பின்னர் கன்னடப் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போகவே. நீயூசிலாந்து சென்று அங்கே செட்டில் ஆகி விட்டார். அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் காலில் அடி பட்டது. ஆனால் ..

அதனை அவர் சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து காலில் கண்டல் காயம் மற்றும் ரத்தக் கட்டிகள் தோன்றியுள்ளது. இதனால் இரவு வேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து…

அவசரமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு காலில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் அப்பாஸ் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலைபார்த்து வருகிறார்.