பல தொழில்… கோடியில் வருமானம்… நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பல தொழில்… கோடியில் வருமானம்… நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

செய்தி வாசிப்பாளராக மலையாள தொலைக்காட்சியில் பணியாற்றி தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா 1984ம் ஆண்டு பிறந்தார்.

டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். ஐயா படத்தில் அவரின் பவ்யமான நடிப்பும், கிராமத்து பெண் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக பில்லா படத்தில் அவரது மாறுபட்ட வேடம் எல்லோரையும் விழிபிதுங்க வைத்தது.

அதில் படு கவர்ச்சியாக நடித்து நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிரவைத்தார். பாடத்தை தொடர்ந்து
விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். ஐந்தில் கூட ஜவான் படத்தின் மூலம் அறிமுகம் ஆஹி 1000 கோடி வசூலை குவித்துவிட்டார். இதனிடையே விக்னேஷ் இயக்கத்தில் ரவுடிதான் படத்தில் நடித்த போது அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு உயிர், உலக என இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் கிறுகிறுக்க வைத்துள்ளார். நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சென்னை மற்றும் மும்பையில் ரூ. 100 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களாவை வைத்து இருக்கிறார்.

இது தவிர படங்கள், தயாரிப்பு நிறுவனம், அழகு சாதன தொழில் என கலக்கும் நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். அதேபோல் தனது சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்து இருக்கிறார். ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.