
இந்த வருடம் யூன் வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை ஜந்து இலட்சத்தினை தாண்டியுள்ளதாக பிரித்தானியா புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கற்கை நெறிகளுக்காக சர்வதேச ரீதியாக வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கையும் இவ் அதிகரிப்புக்கு காரணமாக அமைகின்றது.
இதேவேளை, பிரித்தானியா மூன்று புதிய விசா திட்டங்களை ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் யுக்ரைன் பிரஜைகள் குடியேறுவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் தற்பொது வரைக்கும் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.