புனிதர் மொகமெட் பற்றி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய நபருக்கு மரண தண்டனை

புனிதர் மொகமெட் பற்றி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய நபருக்கு மரண தண்டனை

பாக்கிஸ்தானில் 17 வயது இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய புனிதரான மொகமெட்டை பற்றியும் அவரது மனைவிகளைப் பற்றியும் அவதூறு குறுஞ் செய்தியை இந்த இளைஞர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து பொலிசார் தொடுத்த வழக்கில், குறித்த இளைஞர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதோடு மரண தண்டனையை வழங்கியுள்ளது.

இருப்பினும் பாக்கிஸ்தான் சட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே மரண தண்டனை வழங்க முடியும். இதன் காரணத்தால் முதலில் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ள நீதிமன்றம். அவருக்கு 18 வயது ஆனதும் மரண தண்டனையை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. அட ஒரு பகிடிக்கு இப்படி ஒரு செய்தியை அனுப்பினால், வாழ்கையே காலி ஆகி விடுகிறதே ? நல்ல வேளை நாம் பாக்கிஸ்தானில் பிறக்கவில்லை.