பெரிய டீல் ஒன்றை பிரான்சுடன் முடித்த ரிஷி அகதிகளை அப்படியே திருப்பி அனுப்ப முடிவு – athirvu news

பெரிய டீல் ஒன்றை பிரான்சுடன் முடித்த ரிஷி அகதிகளை அப்படியே திருப்பி அனுப்ப முடிவு

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்று வரும் நிலையில். பல உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி, பிரித்தானிய பிரதமர் ரிஷி பிரான்ஸ் நாட்டோடு டீல் ஒன்றை பேசி முடித்துள்ளதாக அறியப்படுகிறது. பிரான்சில் இருந்து படகு மூலம் வரும் அகதிகளை அப்படியே மீண்டும் பிரான்சுக்கு அனுப்ப, அன் நாட்டு அதிபர் மக்ரோன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் ரிஷி சுண்ணக் அடைந்த முதல் வெற்றி இது தான் என்று அரசியல் அவதானிகள் கூறியுள்ளார்கள். இருப்பினும் இனி ஒப்பந்தம் கைசாத்திட வேண்டும். அதன் பின்னரே அகதிகளை மீண்டும் பிரான்சுக்கு அனுப்ப முடியும். அப்படி பிரித்தானியா செய்யுமே ஆனால், பிரான்சில் இருந்து அகதிகள் வருவது வெகுவாகக் குறையும். இது பிரித்தானிய அரசின் செலவுகளை மிச்சப்படுத்த பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அல்பேனிய நாட்டு அகதிகளே அதிகம் கடலைக் கடந்து பிரித்தானியாவுக்குள் வருகிறார்கள். அவர்களில் பல இளைஞர்கள் அல்பேனியாவில் பொலிசாரால் தேடப்படும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அத்தோடு கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றங்களைச் செய்து விட்டு. அல்பேனியாவில் இருந்து தப்பி பிரான்ஸ் வந்து. பின்னர் அங்கிருந்து கடல் மார்கமாக பிரித்தானியா வருகிறார்கள். இதனால் பெரும் குற்றவாளிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் நாடாக பிரித்தானியா மாறி வருகிறது, என்பது பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்