போருக்கு தயார் ஆகுங்கள்.. சீனாவின் அறிவிப்பால் அடுத்த பெரும் ஆபத்து உருவாகியுள்ளது

Spread the love
போருக்கு

சீனா தனது நாட்டின் ஒரு பாகமாக தைவான் நாட்டை கருதுகிறது. ஆனால் தைவானில் இருக்கும் மக்கள் சீனாவோடு இணைய மறுத்து வருகிறார்கள். இன் நிலையில் தைவான் மீது படை எடுத்து அன் நாட்டைக் கைப்பற்ற பல வருடங்களாக முனைப்புக் காட்டி வருகிறது சீனா. இருப்பினும் அமெரிக்கா முதல் கொண்டு ஐரோப்பிய நாடுகள் தைவானை பாதுகாத்து வருகிறது. தைவானுக்கு தேவையாக அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கி வரும் நிலையில்.

தமது நாட்டை போர் ஒன்றுக்கு தயாராகுமாறு, சீன அதிபர் எக்ஸியாங் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெரும் பின் விளைவுகள் வர உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். மிக விரைவில் தைவானை சீனப் படைகள் தாக்கி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தைவானும் சளைத்தவர்கள் அல்ல. இறுதிவரை போராடியே தீருவோம் என்று உக்கிரைன் போல மல்லுக் கட்டி நிற்கிறார்கள். இதனால் பெரும் போர் ஒன்று ஆசியாவில் வெடிக்கும் நிலை தோன்றியுள்ளதோடு.

இது உலகை மேலும் பொருளாதார ரீதியாக பாதிப்படையச் செய்யும். தைவானில் இருந்து தான் பெரும் இலத்திரனியல் பொருட்கள் ஏற்றுமதியாகிறது. சீனா போர் தொடுத்தால் உலகில் கம்பியூட்டர் தொடக்கம் ஐபோன் என்று அனைத்து சாதனங்களின் விலையும் பன் மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் மொத்தமாக 16 லட்சத்தி 20,000 ஆயிரம் படையினர் இருக்கிறார்கள். ராணுவமாக 9 லட்சம் பேர், கடல் படையில் 3 லட்சம் பேர், வான் படையில் 4 லட்சம் பேர், மேலும் 5 லட்சம் பே, ரிசர்வ் படையணில் உள்ளார்கள். இந்த தொகையானது அமெரிக்கா, இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை விட மிக மிக அதிகம்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.