மனிதரை தவிர வேறு ஏலியன்கள் இல்லை- பல பில்லியன் பேரை கொன்றுவிட்டது Gamma Rays மனிதர்களே பாக்கி !

மனிதரை தவிர வேறு ஏலியன்கள் இல்லை- பல பில்லியன் பேரை கொன்றுவிட்டது Gamma Rays மனிதர்களே பாக்கி !

பரந்து விரிந்து இருக்கும் இந்த அண்டவெளியில், மனிதர்களைப் போல வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்று, இன்றும் விஞ்ஞானிகள் நம்பி வரும் நிலையில். நாசா அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் காமா கதிர்வீச்சு() தான். அமெரிக்கா காமா கதிர்களை ஆரய என 1991ம் ஆண்டு அதி நவீன சாட்டலைட் ஒன்றை விண்ணில் ஏவியது. அதன் அறிக்கையின் படி, எமது பால் வெளி நட்சத்திரக் கூட்டத்தில் மட்டும் தான் இந்த காமா கதிரியம் மிக மிகக் குறைவாக இருக்கிறது.

ஏனைய அனைத்து இடங்களிலும் காமா கதிரிய ஒளிக்கீற்று அதிகமாக உள்ளது. இந்த காமா றே பேஸ்ட்(gamma-ray bursts) என்று அழைக்கப்படும் ஒளிக்கீற்றானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த காமா பேஸ்ட் என்று அழைக்கப்படும் கதிர்கள், ஒன்றின் பவர் மட்டும் 1 குவான் ரில்லியன் ஆகும். அதாவது 19 பூச்சியத்தை சேர்க்க வேண்டும். அந்த அளவு சக்த்தி வாய்ந்தது. அதாவது சூரிய ஒளிக் கீற்றுடன் ஒப்பிட்டால். 10000000000000000000 மடங்கு அதிகமாகும். இதனால் இவை ஒரு பூமியின் மீது பட்டால். அந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரு நொடியில் அழிக்க வல்லவை.

இதன் காரணத்தால் தற்போது விஞ்ஞானிகள் என்ன கருதுகிறார்கள் என்றால், நமது பால்வெளி அண்டத்தை தவிர ஏனைய இடங்களில் காமா பேஸ்ட் காணப்படுவதால். அங்கே எந்த ஒரு உயிரினமும் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதுபோக தோன்றி இருந்தாலும் அவை அனைத்தும் அழிந்து போய் இருக்கும் என்கிறார்கள். இதுவரை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஒளிக் கிற்றுகளில், காமா ஒளிக்கீற்றே மிக மிக சக்த்தி வாய்ந்தது. குறிப்பாக நியூட்ரோன் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒருவகை சூரியன், எரிந்து முடிந்து, அது வெடித்து பின்னர் அடங்கும் போது தான் இந்த மிகவும் சக்த்திவாய்ந்த காமா கதிர்கள் உருவாகிறது. இதனை எவராலும் எந்தப் பொருளாலும் தடுக்க முடியாது.

எனவே எம்மைப் போன்ற அறிவு ஜீவிகள் வேற்றுக் கிரகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஏன் இதுவரை எம்மை தொடர்புகொள்ளவில்லை என்று எம்மில் பலர் நினைத்திருந்தால். இது தான் அதற்கான பதிலாக இருக்கும். அவர்கள் உயிருடன் இல்லை. அப்படிப் பார்த்தால் இந்த பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், மனிதர்கள் மட்டும் தான் வாழ்கிறார்களா ? என்ற ஒரு விதமான பயம் தான் தோன்றும். இந்த காமா கதிர்கள், உலவும் அந்த இடத்தில் இருந்து பூமி நோக்கி காமா கதிர்கள் வர பல ஆண்டுகள் பிடிக்கும். அதேவேளை அதிக தூரம் என்பதனால் காமா கதிர்களின் வீரியம் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் பூமி இன்றுவரை தப்பிப் பிழைக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.