யாழில் 15 வயது சிறுமியின் கல்யாணம் தடைப்பட்டதால் வீட்டை எரித்த 4 பேர் கொண்ட குழு – athirvu news

யாழில் 15 வயது சிறுமியின் கல்யாணம் தடைப்பட்டதால் வீட்டை எரித்த 4 பேர் கொண்ட குழு

யாழ்பாணத்தில் என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை. நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.  வெளிநாட்டுக் காசு செய்யும் வேலை தான் இவை. குளிர், பனி, மழை என்று பாராமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் காசை உழைத்து. அதனை ஊரில் உள்ள உறவுகளுக்கு அனுப்பினால். இப்படித் தான் நடக்கும். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் சொகுசாக வாழும் நபர்கள் இவர்கள். யாழ் ஏழாலையில் வெறும் 15 வயதுச் சிறுமிக்கு காதல். இது ஆரம்பித்து 1 வருடம் ஆகிறதாம். அப்படி என்று பார்த்தால், 14 வயதில் காதல் தொடங்கி விட்டது..

அவரை திருமணம் செய்ய காதலன் முற்பட்டவேளை, அதனை வீட்டார் தடுத்து விட்டார்கள். சிறுமி மைனர் என்று கூறி, பொலிஸ் முறைப்பாடு செய்ததால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் கோபமடைந்த காதலன், தனது நண்பர்களோடு சேர்ந்து முதலில் சிறுமியின் அப்பாவை தாக்கினார். பின்னர் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதன் பின்னர் நேற்று முன் தினம், இரவு வீட்டுக்குள் புகுந்து, வீட்டை எரித்துள்ளார்கள். அதற்கு முன்னதாக பொருட்களை அடித்து உடைத்தும் உள்ளார்கள். இவர் தான் மாப்பிள்ளை …

பொலிசாரிடம் முறையிட்டும் எந்த ஒரு பயனும் இல்லை என்கிறார்கள் பெற்றோர். இதுவரை பொலிசார் குறித்த காதலனை கைது செய்யவில்லை. அது ஏன் என்பதும் புரியவில்லை. என்ன அரசியல் பலம் அவருக்கு இருக்கிறது என்பது தான் கேள்வியாக உள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்