பொது மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் என்னால் தீர்க்க முடியாது, என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் பிரதமர் ரிஷி சுண்ணக். நான் உண்மையைப் பேசுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 2024ம் ஆண்டு வரை பிரித்தானியாவில் உள்ள மக்கள், சில கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க தான் நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் இன்னும் 2 வருடங்களின் பின்னரே பிரித்தானியா வழமைக்கு திரும்பும் என்பது ரிஷியின் கருத்தாக உள்ளது.
உணவுகளின் விலை ஏற்றம், வட்டி விகிதம் அதிகரிப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பெற்றோல் விலை அதிகரிப்பு மற்றும் தேசிய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ள விடையம் என்று பல இன்னல்களை மக்கள் சந்தித்து வரும் நிலையில். ரஷ்யாவின் போர் காரணமாக , மின்சாரம் மற்றும் எரிவாயுவின் விலையும் பன் மடங்காக அதிகரித்துள்ளது. இது போக நாளுக்கு நாள் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் அல்பேனிய அகதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளார்கள்.
அவர்களை ஹோட்டலில் தங்க வைத்துள்ளது பிரித்தானிய அரசு. இதனால் ஏற்படும் செலவும் மக்கள் தலையில் தான் விழுகிறது. பிரித்தானியாவில் மக்கள் வசிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.