Back Side (குதத்தில்) கடிப்பதை சும்மா எடுத்துக்கொள்ள வேண்டாம் இந்த 12 நோய்கள் இருக்க வாய்ப்பு !

இந்த செய்தியை பகிர

(1) பின் பக்கத்தில்(குதத்தில்) கடிப்பது என்பது முதலில் செக்ஸ் சம்பந்தப்பட்ட நோயாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் உடல் உறவில் ஈடுபட்டு, அதனைத் தொடர்ந்து கடிக்கிறது என்றால் உடனே வைத்தியரை நாடுவது நல்லது.

(2) ஜட்டியை மிக நீண்ட நேரம் போட்டு இருந்தால், வியர்வை அதிகமாகி அதனூடாக கடிக்க ஆரம்பிக்கும்

(3) பக்டீரியா தாக்கம்: உடலில் மிகவும் மென்மையான பாகங்களில் ஒன்று மல வாசல், இதில் பக்டீரியா தாக்கம் இருக்கலாம்.

(4) தூக்கம் இன்மை, மன அழுத்தம் காரணமாக குதப் பகுதியில் உள்ள மல வாசல் வீக்கம் அடையும். இதனால் சொறி ஏற்படலாம்.

(5) தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். இல்லை என்றால் வெறியேறும் மலம் கட்டியாக வெளியேறும். அது மல வாயிலை சிராய்த்து புண் ஆக்கும். இதனால் அரிப்பு ஏற்படலாம்.

(6) எக்ஸிமா … உடலில் வேறு இடங்களில் எக்ஸிமா இருந்தால் அது நிச்சயம் குதப் பகுதியிலும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

(7) பொஸோறியஸ் என்னும் சரும நோய். இது தோலை தடித்த தோலாக மாற்றும். இந்த நோய் இருந்தாலும் குதப் பகுதியில் அரிப்பு ஏற்படும்.

(8) குதப் பகுதியில் உள்ள மல வாசலில் பல ஆயிரம் ரத்த நாளங்கள் உள்ளது. அவை புடைத்தாலும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(9) மேலும் பல வருடங்களாக டயபிட்டிக் நோய் இருந்தால், அடிக்கடி குதப் பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதுவும் ஒரு அறிகுறி தான்.

(10) நாம் எடுத்துக் கொள்ளும் சில வகையான மருந்துகள், இந்த பின் விளைவை ஏற்படுத்த வல்லவை. ஆனால் அவை தானாக நின்று விடும். அஞ்சத் தேவையில்லை.

(11) பொதுவாக அதிக காரம் சாப்பிட்டாலும் இது போன்ற அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

(12) நாக்கிளிப் பூச்சி, கொக்கிப் பூச்சி போன்ற பாரசைட் எமது உடலில் இருந்தாலும் குதத்தில் கடிப்பு ஏற்படும்

 


இந்த செய்தியை பகிர