
இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை திருத்தச் சட்டங்களுடாக மாற்றித் தம்வசம் வைத்திருக்கும் இலங்கையின் கடந்தகால அரசு இதனை மாகாணங்களுக்குப் பகீர்ந்து கொடுக்கத் தயக்கம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி இலங்கையில் தமிழ் மக்களின் சம உரிமை, நீதி, அமைதி மற்றும் மரியாதை தொடர்ச்சியாகக் காப்பாற்றப்பட 13 வது அரசியலமைப்புச் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். எனப் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்திய அரசு தொடரச்சியாக இலங்கை மக்களுக்குப் பாரிய உதவித்திட்டம்களை வழங்கி வருவதுடன் இதுவரையில் 46000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கையின் தற்போதய ஜனாதிபதியால் அரசியலமைப்பின் 13 திருத்தச்சட்ம் அமுல்படுத்தப்பட்டு அதனூடாக மாகாணங்களுக்கான அதிகாரப் பகீர்வு, தமிழ் மக்களுக்கான சம உரிமை, பொருளாதார முன்னேற்றம் என்பன ஏற்படுத்தப் படும் என்ற நம்பிக்கை இருப்பதாகப் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.