பெண்னை இப்படியா நடத்துவது; ரஜினியின் கேவலமான செயல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் உள்ளார். அதற்காக பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ரஜினி நடிப்பில் சமீபத்தி வந்த 2.0 படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் ரஜினி மற்றும் அவரது மனைவி, பேரகுழந்தைகளுடன் பார்த்தார் ரஜினி. அந்த போட்டோ மற்றும் வீடியோ இரண்டும் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் அவர்களுக்கு பின் ஒரு பெண் நின்றுகொண்டே இருந்தார். அந்த பெண் சூப்பர்ஸ்டார் வீட்டில் வேலைக்காரி எனவும் அவர் மொத்த படத்தையும் நின்றுகொண்டே பார்த்தார் என்றும் கூறப்படுகிறது.

அத்தனை சீட்டுகள் காலியாக இருக்கும் நிலையில் அவரை அமர வைக்காமல், நிற்க வைத்தே கொடுமை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.