16 கோடி முதலீட்டில் உருவாகிய படம் 400 கோடிக்குமேல் வசூல்….. சினிமாவில் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது!!!!

இந்த செய்தியை பகிர

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்தமாதம் வெளியாகிய படம்தான் “காந்தாரா” இப்படம் வெளியாகியதிலிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 16 கோடி முதலீட்டில் கன்னட மொழியில் உருவாகிய இப்படத்தில் நடிகர் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கர்நாடகாவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இப்படமானது அணைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அதாவது நிலம் மீதான அதிகாரம், சாதி ஒடக்குமுறை மற்றும் நாட்டார் தெய்வ வழிபாடு ஆகிய அம்சங்களை கொடுத்திருந்தார் இயக்குநர்.

இப்படம் வெளியாகி 56 நாட்களாகியும் திரையரங்குகளில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை, தற்போது வரைக்கும் 400 கோடிக்கு மேல் வசூலை கொடுத்துள்ளது. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குநரை வரவழைத்து பாராட்டியதுடன் தங்க சங்கிலி ஒன்றினை நினைவு பரிசாக வழங்கியுள்ளார். இந் நிலையில் திரையுலகினர் அணைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர