333 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆப்பிள் ஐ போன் நிறுவனம் என்ன நடந்தது?

கடந்த 16 வருடங்களில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது, ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் ஐ போன் தற்போது தயாரித்து புதிதாக வெளியிட்டுள்ள எக்- ஸ் மாடல்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்து 3 வாரங்கள் ஆகியும் எதுவும் பெரிதாக விற்க்கவில்லை. இதனால் ஆப்பிளின் பங்குச் சந்தை வெகுவாக சரிந்துள்ளதோடு, அதன் விளைவாக விற்பனை சந்தையும் பெரும் வீழ்ச்சி கண்டு. சுமார் 333 பில்லியன் டாலர்களை அது இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போனின் விலையை வெகுவாக அதிகரித்து வைத்துள்ளது. சாதாரண ஐ போன்கள் சுமார் 600 தொடக்கம் 1200 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆகிறது. தற்போது வரும் ஐ போன்களில் எந்த ஒரு புது விடையங்களும் இல்லை. இருப்பினும் புதிது புதிதாக மாடல்களை அடித்து அன் நிறுவனம் சந்தைப்படுத்த முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை வாங்கும் பொதுமக்கள், இம் முறை ஆப்பிள் ஐ போனை வாங்கவில்லை. காரணம் அதன் விலை மிக அதிகம். அத்தோடு புதிதான எதுவும் இல்லை.

இந்த இரண்டு காரணங்களே ஐ போனின் வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் என்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் மக்கள் சரியான பாடம் ஒன்றை ஆப்பிள் நிறுவனத்திற்கு புகட்டியுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது.