யாழில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்; முடக்கிய பணியை தொடக்கிய அரசு!

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அனைத்து பணிகளும் சிவில் வானூர்திப் போக்குரத்துத் திணைக்களத்தால் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதிக்காக காத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரமுயர்த்தி கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தமிழகத்துக்கு வானூர்திச் சேவைகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

அதில் வானூர்தி திணைக்களம் வானூர்திப் பதை வரையும் பணிகள் உள்ளிடட சகல விடயங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை ஆயிரம் மில்லியன் ரூபாயில் முன்னெடுப்பதற்கன அமைச்சரவை அனுமதி கூட்டு அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்டிருந்தது அதற்கான கடிதம் சிவில் வானூர்தி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அதன் காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி அரசு முன்னைய அமைச்சரவைப் பத்திரத்தை செயற்படுத்துவற்கு அனுமதியைக் கோரி மீளவும் அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது.

பலாலி வானூர்தித் தளம் பிராந்திய வானூர்தித் தளமாக மூறுகின்ற பட்சத்தில் சர்வதேச போக்குவரத்து மற்றும் சரக்கு ஏறுமதி இறக்குமதிகளில் இடுபட்டுவரும் பாரிய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.