போத்தல் வெட்டுக் காயங்களுடன் 2 பேர் வவுனியா வீதியில் கிடக்கிறார்கள்

Spread the love

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வீதியில் வெட்டுக் காயங்களோடு 2 பேர் இருந்ததை, நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். குறித்த 2 நபர்களுக்கும் தலா 53, 54 வயதாகிறது என்றும்.

இவர்கள் இருவர் உடல்களில், போத்தல் வெட்டுக் காயங்கள் உள்ளதாகவும் பொலிசார் அதிர்வு இணைய நிருபருக்கு தெரிவித்துள்ளார்கள். மேலும் குறித்த 2 நபர்களும் மது போதையில் இருந்துள்ளார்கள். இதனால் மது அருந்தி விட்டு ஏற்பட்ட தகறாறு இது என்று பொலிசார் சந்தேகமடைந்துள்ளார்கள் என்றும் அறியப்படுகிறது.