2024ன் முதல் 10 பணக்காரர்கள் 9வது இடத்தில் முகேஷ் அம்பாணி முதல் இடத்தில் யார் தெரியுமா ?

2024ன் முதல் 10 பணக்காரர்கள் 9வது இடத்தில் முகேஷ் அம்பாணி முதல் இடத்தில் யார் தெரியுமா ?

2024ம் ஆண்டில் உலகில் உள்ள பணக்காரர் வரிசையில், முதல் 10 பேர் யார் என்ற உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி முதல் இடத்தில் “லூயிஸ் விட்டோன்” நிறுவனத்தின் உரிமையாளர் , பேர்னாட் ஆர்னோல் உலகின் முதலாவது பெரும் பணக்காரராக உள்ளார். அவர் சொத்து மதிப்பு 233B பில்லியன் டாலர்கள் ஆகும். இலங்கையின் மொத்தக் கடனை 30 தரத்திற்கு மேல் அவரால் கட்ட முடியும் என்றால் பாருங்கள்.

2ம் இடத்தில் எலான் மஸ்க் நமக்கு எல்லாம் தெரியும் டெஸ்லா கார் உரிமையாளர். அவர் சொத்து மதிப்பு 195B பில்லியன் டாலர்கள். 3ம் இடத்தில் ஜெவ் பென்சோ, அமேசன் நிறுவுனர். அவர் சொத்து மதிப்பு 194B பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 4ம் இடத்தில் மார்க் சூக்கம்-பேர்க், பேஸ்புக் நிறுவுனர், இவரின் சொத்து மதிப்பு, சுமார் 177B பில்லியன் டாலர்கள் ஆகும். 5ம் இடத்தில் லாரி எலிசன், இவர் வேறு யாரும் அல்ல நமது கம்பியூட்டரில் மற்றும் பல மென்பொருட்களில் பயன்படுத்தும் ஒராக்கிள் புரோகிராம் இவருடையது தான். இவர் சொத்து மதிப்பு 141B பில்லியன் டாலர்கள்.

6ம் இடத்தில் வாரன் பஃவட் , இவரது சொத்து மதிப்பு 133B டாலர்கள் ஆகும். 7 வது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார்.(மைக்கிராஃ சாப்ட்) இவரது சொத்து மதிப்பு 128B பில்லியன் டாலர்கள். 8வது இடத்தில் ஸ்டீவ் பல்மர், இவரது சொத்து மதிப்பு 121B பில்லியன் டாலர்கள். 9ம் இடத்தில் இந்தியரான முகேஷ் அம்பாணி இருக்கிறார். அவர் சொத்து மதிப்பு 116B பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 10 இடத்தில் லாரி-பேஜ் இருக்கிறார். இவர் வேறு யாரும் அல்ல கூகுள் நிறுவுனர். இவரது சொத்து மதிப்பு 114B பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.