உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம் இருக்கும் இடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் திடீர் வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெண்கள் பழைய தங்கத்தை விற்று அதை பணமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்கம் இருக்கும் மிகப்பெரிய இடம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப்பெரிய பகுதியில் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒட்டுமொத்த தென் அமெக்காவின் சுரங்கத் தொழிலை மொத்தமாக மாற்ற கூடியது என்று கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளிப்படிமங்கள் இங்கு காணப்படுவதால் தங்கத்தின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விகுனா கனிமப் படுகை (Vicuña Mineral Resource) என்று அழைக்கப்படும் இந்தத் இடத்தை லுண்டின் சுரங்கம் (Lundin Mining) மற்றும் பிஹெச்பி (BHP) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன. இங்கு சுமார் 13 மில்லியன் டன் செம்பு, 32 டன் மில்லியன் அவுன்ஸ் அளவுக்கு தங்கம், 669 மில்லியன் அவுன்ஸ் அளவுக்கு வெள்ளி கிடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவை மட்டும் தோண்டப்பட்டு எடுக்கப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம், வெள்ளி கிடைக்கப்பட்ட பகுதியாக ஆண்டிஸ் மலைப்பகுதி இருக்கும்.
அர்ஜெண்டினாவின் எல்லைக்கு சொந்தமான பகுதியில் ஆண்டிஸ் மலை இருப்பதால் அங்கு கிடைக்கும் தங்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை மேலும் மேம்படும்.
உட்கட்டமைப்புகள், வேலை வாய்ப்புகள், சர்வதேச வர்த்தகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேநேரம் மலை பகுதியில் இருக்கும் தங்கத்தை சுரண்டி எடுத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்கு வாழும் மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்