Posted in

எலோன் மஸ்கின் புதிய “அமெரிக்கா கட்சி” உதயம்

செல்வந்த தொழிலதிபரான எலோன் மஸ்க், “அமெரிக்கா கட்சி” என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஸ்க் கூறுகையில், இந்தக் கட்சி 2 அல்லது 3 செனட் இடங்களிலும், 8 முதல் 10 அமெரிக்க பிரதிநிதிகள் சபை மாவட்டங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தும். கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தக் கட்சி 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.