தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான ஹெச். வினோத், தற்போது தளபதி விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹெச். வினோத் – விஜய் கூட்டணி முதல்முறையாக இணைவதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், ஹெச். வினோத் அடுத்து இயக்கவிருக்கும் படம் குறித்த அதிரடித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, “துணிவு” படத்தை இயக்கி முடித்த கையோடு, நடிகர் தனுஷிடம் வினோத் ஒரு கதையின் சுருக்கத்தை கூறி, அவரது சம்மதத்தைப் பெற்றுவிட்டாராம்!
தற்போது விஜய் பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால், தனுஷ் படத்திற்கான கதைப் பணிகள் சற்றே தாமதமாகியுள்ளன. எனினும், “ஜனநாயகன்” படப்பிடிப்பு முடிந்தவுடன், தனுஷிடம் வினோத் சொன்ன கதைக்கான வேலைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வினோத் – தனுஷ் கூட்டணிக்கு ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.