லண்டனில் கடை வைத்திருப்பவரா நீங்கள் ? அல்லது உங்கள் உறவினர்கள் கடை வைத்திருந்தால் தயவு செய்து இதனை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பிரித்தானியாவில் இயங்கி வரும் மற்றும் தனியார் மயமாக்கப்பட்டுள்ள , பல ஆயிரம் நபர்களை தவறாக குற்றம் சாட்டி, பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. மேலும் பல ஆயிரம் பேரிடம் காசைக் கறந்துள்ளது. இதில் 13 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது அதிர்ச்சியான தகவல் !
1999ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, பிரிட்டனில் இயங்கி வந்த POST OFFICR நிறுவனம், Fujitsu என்னும் ஜப்பானிய கம்பெனியிடம் தங்களுக்கு horizon எனப்படும் ஒரு செயலியை வடிவமைத்து தருமாறு கேட்டுள்ளது. இதற்கு அமைவாக 1999ம் ஆண்டு Fujitsu கம்பெனி horizon என்ற சாஃப்ட்வேரை அவர்களுக்கு கொடுத்துள்ளது. இது post-ஆபிஸ் கணணிகளை(TILL) இயக்கும் Software ஆகும்.
இந்த நிலையில் குறித்த சாஃப்ட்வேரில் பல பிழைகள் இருந்துள்ளது. கடையை மூடும் வேளை காசைக் கணக்குப் பார்த்தால், திடீரென £40,000 ஆயிரம் பவுண்டுகள் குறைவாக உள்ளது என்று அது காட்டும். சிலவேளை 25,000 பவுண்டுகளை காணவில்லை என்று சொல்லும். இதனால் பல கடைகளின் முதலாளிகள் குழம்பிப் போனார்கள். ஆனால் Post Office Counter உடன் பேசவே முடியாது. அவர்கள் காணாமல் போன பணத்தை மீட்க்க, பொலிசாரை நாட. பொலிசார் கடை உரிமையாளர்களை மற்றும் வேலை செய்த நபர்களை சரமாரியாக கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள்.
பலர் தமது வீடுகளை விற்று பணத்தை கட்டியுள்ளார்கள். பலர் தமது சேமிப்பு பணத்தை கொடுத்து செட்டில் செய்துள்ளார்கள். மேலும் சோகமான சம்பவம் என்னவென்றால், இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 13 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது போக வாடிக்கையாளர்களையும் இந்த சிஸ்டம் ஏமாற்றியுள்ளது. Post Officeஇல் கணக்கு வைத்திருந்த பல நபர்களின் கணக்கில் பணம் காணமல் போயுள்ளது.
கேட்டால் நீங்கள் தான் பணத்தை மாற்றி இருக்கிறீர்கள் என்று Post Office நிலையம் தெரிவிக்கும். இப்படி தனது சிஸ்டத்தில் பிழை இருப்பதை கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை Post office counters LTD. இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் சிலர்(Sub Post masters) இணைந்து பெரும் வழக்கு ஒன்றை பிரித்தானிய உச்ச நீதிமன்றில் தொடுத்தார்கள். இதனூடாக சிஸ்டத்தை பரிசோதனை செய்து பார்த்த நிபுணர்கள் அதிர்ந்து போனார்கள். பல பிழைகள் அந்த சிஸ்டத்தில் இருப்பதாக மக்களுக்கு தற்போது தான் தெரியவந்துள்ள நிலையில். மன உழைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை வரை தூண்டிய POST OFFICE COUNTER நிறுவனத்துக்கு பல கட்டுப்பாடுகளை தற்போது நீதிமன்றம் விதித்துள்ளதோடு பெரும் நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்களுக்கும் தவறு இழைக்கப்பட்டு இருந்தால், பணத்தைக் காணவில்லை என்று கூறி, இருந்தால் அல்லது பொலிசாரிடம் சொல்லி விசாரணை மேற்கொண்டு உங்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி இருந்தால். நீங்களும் நீதிமன்றை அணுகி பெரும் பணத்தை நஷ்ட ஈடாகப் பெற்றுகொள்ள முடியும். மேலும் தகுந்த சொலிசிட்டர் ஒருவரை உடனே நாடுங்கள். இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களோடு பகிரவும்.
Source : https://osnews.co.uk/shockwave-hits-uk-horizon-scandal-drives-at-least-13-to-suicide/