பிரிட்டனில் சஞ்ஜீவ் சூசைப் பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆரணி சூசைப் பிள்ளை ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் அவர்கள் நடத்திவந்த எண்ணை சுத்திகரிப்பு ஆலை, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10B பில்லியன் டாலர்கள் பெறுமதியான எண்ணையை சுத்திகரித்து வந்தது. ஆனால் திடீரென அந்த கம்பெனி நஷ்டத்தில் செல்வதாக அறிவிக்கப்பட்டு, இழுத்து மூடும் நிலைக்கு வந்தது.
இதனை அடுத்து பிரித்தானிய அரசு தலையிட்டு, குறித்த கம்பெனியை கையகப் படுத்தி நடத்தி வரும் நிலையில். இவர்கள் சுமார் 250 மில்லியன் பவுண்டுகள் வரி கட்டாமல் வரி ஏய்ப்புச் செய்துள்ள விடையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வரி திணைக்கள அதிகாரிகள் ஆரணி மற்றும் சஞ்ஜீவை தொடர்புகொள்ள முற்பட்டவேளை. அவர்கள் நாட்டிலேயே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தம்பதிகள் பெரும் தொகைப் பணத்தோடு நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் நடத்தி வந்த Prax என்ற கம்பெனி இழுத்து மூடும் நிலைக்கு வந்தவேளை கூட வங்கிக் கணக்கில் இருந்து 4 மில்லியன் பவுண்டுகளை தமது சொந்தக் கணக்கிற்கு மாற்றி இருக்கிறார்கள். தற்போது வரி திணைக்களம், இவர்களை வலை போட்டு தேடி வரும் நிலையில், வர்த்தக அமைச்சர் எட் மிலபான் , பொலிசாருக்கு தகவல் சொல்ல , பிரிட்டன் பொலிசார் இவர்களை தேட ஆரம்பிக்க உள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.