Posted in

சீனாவிடம் இருந்து 40 J-10C விமானங்களை வாங்கும் ஈரான்: இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் J10C க்கு மவுசு

இந்திய விமானங்களோடு விளையாடி, 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய சீனாவின் J10c விமானத்தை தற்போது மேலும் தரம் உயர்த்தி, 40 விமானங்களை ஈரானுக்கு விற்க்க சீனா முடிவெடுத்துள்ளது. இதனூடாக மேற்கு உலக நாடுகளின் விமானங்களோடு சீனா நேரடியா போட்டி போட ஆரம்பித்துள்ளது. சீனா இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில், J10C விமானங்களை மேலும் தரம் உயர்த்தி, அதனை ஈரானுக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், சீனாவை தொடர்பு கொண்டு தமது அதிருப்த்தியை வெளியிட்டுள்ளார். இருப்பினும் சீனா கேட்டபாடாக இல்லை. இந்த 40 விமானங்களும் ஈரானுக்கு கிடைத்தால், ஈரான் ஒரே இரவில் பலம் மிக்க நாடாக மாறிவிடும். உள்ளே நுளையும் இஸ்ரேலிய விமானப் படை விமானங்களுக்கு J10C சிம்ம சொப்பனமாக அமையும். சீனாவின் இந்த அதி நவீன விமானத்திற்கு உலகளாவிய ரீதியில் தற்போது மசுவு பன் மடங்காக அதிகரித்துள்ளது.

காரணம் இந்தியா தான். இந்தியாவின் 5 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்த J10C விமானம் தான் என்பது ஊர் அறிந்த உண்மை. பாக்கிஸ்தானுக்கு சீனா கொடுத்த J10C விமானம் மிகவும் தரம் குறைந்த விமானம் ஆகும். தற்போது ஈரானுக்கு கொடுக்க உள்ள விமானங்கள் மிகவும் தரம் உயர்ந்தவை என்று கூறப்படுகிறது. வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகள், வானில் இருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் என்று இதில் பல தரப்பட்ட அம்சங்கள் உள்ளது.

மேலும் “ரியல் டைம்” ராடர் என்ற வசதிகள் உள்ளது. இதனால் தரை கட்டுப்பாட்டு தளம் எந்த தகவலையும் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. தரையில் இருந்து வரும் ஆபத்து, வானில் இருந்து வரும் ஆபத்து இவை அனைத்தையுமே இந்த J10C கண்டு பிடித்து, உடனே பாதுகாப்பு நடவடிக்கையை தானே மேற்கொள்கிறது. இதனால் பைலட்டின் வேலை மிகக் குறைவு. ஈரானுக்கு இந்த விமானம் கிடைத்தால், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆட்டம் வெகுவாகக் குறையும் என்பதில் அச்சம் இல்லை.