விஜய் பிரபல வில்லன் நடிகரின் காலில் விழுந்தமைக்கான காரணம் இதுதான்!

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்து வணீக ரீதியாக தோல்வி அடைந்த படம் புலி. இந்த படத்தில் விஜய்யின் ஓபனிங் காட்சியே அவர் அடியாள் ஒருவரின் காலில் தொங்கி கொண்டு வருவது போல தான் இருக்கும்.

இந்த காட்சி ஏன் வைக்கப்பட்டது என்று புலி படத்தின் சண்டைப்பயிற்சியாளரான திலீப் சுப்புராயன் சமீபத்திய பேட்டியில் விளக்கப்படுத்தியுள்ளார்.

அதில், இந்த படம் முழுவதுமாக குழந்தைகளுக்கான படம். இந்த படத்தில் விஜய்யின் ஹீரோயிசம் படம் போக போக தான் அதிகமாகுகின்ற மாதிரி கதை உருவாக்கப்படிருந்தது.

மேலும் அப்போது குழந்தைகளிடையே, ஒரு அம்மாவின் காலில் ஒரு குழந்தை தொங்கி கொண்டு வருவதுபோல் இருக்கும் விளம்பரம் நன்கு பிரபலமடைந்து இருந்தது. அதனால் தான் அந்த காட்சியை படமாக்கினோம் என்றார்.