சர்கார் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெருமை!

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதலாகவே கிரேஸ் இருக்கிறது. அவரின் சில செய்கை என்னதான் ரசிகர்கள் கிண்டல் செய்து விமர்சனம் செய்தாலும் அவரும் அதை ஜாலியாக எடுத்துக்கொள்கிறார்.

கடந்த வருடம் அதிக படங்களை கொடுத்த ஹீரோயின் என்றே சொல்லலாம். அந்த வகையில் தெலுங்கில் அஞ்ஞாதவாசி, மகாநடி என்ற படங்கள் வெளியானது.

இதில் மகாநடி சிறப்பான வரவேற்பை பெற்று நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது. தமிழில் அவர் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் என படங்கள் வந்தன.

இதில் சர்கார் பிளாக் பஸ்டர் ஹிட் என சொல்லலாம். தற்போது அவர் மலையாளத்தில் மரக்கார் அராபிகடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இதற்கான பட பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. புதுமுக இயக்குனர் நரேந்திரா இயக்கும் இப்படம் ஹீரோயினை மையப்படுத்திய கதையாம்.