
நடிகை கஜோலின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்…
வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் தான் கஜோல். தமிழில் “மின்சார கனவு” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பாலிவுட் குயின்களின் வரிசையில் இவரும் ஒருவர். பாலிவுட்டில் ஷாருகானுடன் இணைந்து “பாசிகர்” என்ற படத்தில் நடித்துப் பிரபலமானார்.
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல் பல முன்னணி ஹீரோக்களுடன் இனைந்து நடித்துள்ளார். அதன் பின் அஜய் தேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “விஐபி 2” படத்தில் நடித்துள்ளார்.
தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தனது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். இந்நிலையில் வெள்ளை நிற உடையில் ஸ்மார்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.


