கேப்டன் உடன் நடிக்க மறுத்த 5 நடிகைகள்..

கேப்டன் உடன் நடிக்க மறுத்த 5 நடிகைகள்..

நடிகர் விஜயகாந்த் தன்னை நேசித்த கோடிக்கணக்கான மக்களை மீலா துயரில் வாழ்த்திவிட்டு மண்ணுலகை விட்டு விடை பெற்று இருக்கிறார். அவருடைய மறைவு ஒவ்வொரு ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய பேரிடியாக அமைந்திருக்கிறது. கேப்டனை பற்றிய நிறைய நினைவலைகளை பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி அவர் ஆரம்ப காலத்தில் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் அந்த பேட்டியில் தன்னுடன் நடிக்க மறுத்த நடிகைகளை பற்றி பேசி இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் மக்கள் கேப்டனை ஹீரோவாக ஏற்றுக் கொண்டாலும், அவருடன் நடிப்பதற்கு கதாநாயகிகள் ஒத்துக் கொள்ளவே இல்லை. கதை பிடித்து, சம்பளம் ஓகே ஆன பின்பு ஹீரோ விஜயகாந்த் தான் என தெரிந்தால் உடனே அய்யய்யோ அந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களாம்.

ஒரு முறை நடிகை ஸ்ரீபிரியாவுடன் விஜயகாந்த் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்திருக்கிறது. பட குழு மொத்தமும் ஊட்டிக்கு சென்ற பின்பு, ஸ்ரீ பிரியா மட்டும் வரவே இல்லை. காரணம் கேட்டு கேப்டன் அதிர்ந்து போய் இருக்கிறார். விஜயகாந்த் உடன் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி ஸ்ரீபிரியா பாதியிலேயே அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

நடிகைகள் ராதிகா, ஸ்ரீதேவி, சரிதா, அம்பிகா, ராதா ஆகியோர் கூட விஜயகாந்த் உடன் நடிக்க முதலில் ஒத்துக் கொள்ளாதவர்கள். இதில் சரிதாவுக்கு விஜயகாந்த் உடன் நடிக்க பிடிக்கவில்லை என எப்படி கேப்டனிடம் சொல்லப்பட்டதோ, அதேபோன்று சரிதாவிடம் விஜயகாந்த் உங்களுடன் நடிப்பதற்கு மறுத்துவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு விஜயகாந்த் சரிதா வீட்டிற்கே நேரடியாக சென்று உண்மையை சொல்லி இருக்கிறார்.

உண்மையில் இந்த நடிகைகள் எல்லாம் விஜயகாந்துடன் நடிக்க மறுத்ததற்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி நடந்து இருக்கிறது. அவர்கள் நடிப்பதற்கு ஓகே சொன்னாலும், அய்யய்யோ விஜயகாந்துடன் படம் பண்ணாதீர்கள், உங்கள் கேரியரே முடிந்துவிடும், பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ண அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காது என அந்த நடிகைகள் மிரட்டப்பட்டதாக கேப்டன் சொல்லி இருக்கிறார்.

அதேபோன்று விஜயகாந்தை ஒரு படத்தில் புக் செய்து நான்கு நாட்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு அதை அப்படியே நிறுத்தி விடுவார்களாம். விஜயகாந்த்திற்கு நடிக்க வரவில்லை, அதனால் தான் அந்த படம் கைவிடப்பட்டது என்று சொல்வதற்காக தான் இந்த நாடகம் கூட நடந்து இருக்கிறது. எப்படியாவது கேப்டனை சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என மிகப் பெரிய அரசியல் கோலிவுட்ல நடந்து இருக்கிறது.