பிரிட்டன் வான் பரப்பில் மர்ம விமானம்: துரத்தியடிக்க சீறிப் பறந்த டைஃபூ விமானங்கள்

 

நேற்றைய தினம்(10) பிரித்தானிய வான் பரப்பினுள் மர்ம விமானம் ஒன்று நுளைந்துள்ளது. குறிப்பாக முதல்கட்ட பாதுகாப்பு ராடர் வளையத்தை அது தாண்டி உள்ளே நுளைந்துள்ளது. இதனை அடுத்து பிரித்தானிய வான் படையின் கட்டளை நிலையம் குறித்த விமானத்தை அவதானித்து. தன்னை அடையாளப்படுத்துமாறு ரேடியோ வழியாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

ஆனால் அந்த விமானம் தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபடவே, அதனை வழி மறிக்க என றோயல் விமானப்படையின் டைஃபூ ரக அதி நவீன போர் விமானம் 2 கிளப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம விமானம் ரஷ்ய வேவு பார்க்கும் விமானமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றவே. குறித்த விமானத்தை வழிமறிக்க சென்ற விமானிகளுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் பிரித்தானிய விமானம் செல்ல முன்னரே அது திடீரென சர்வதேச வான் பரப்பினுள் சென்று மறைந்துவிட்டது. இது தொடர்பாக பிரித்தானியா சாட்டலைட் படங்களைப் பெற்று மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.