81 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஒப்புதல் தலா 25 லட்சம் 20கோடி ரூபா வழங்கும் லைக்கா சுபாஷ்கரன் ! – athirvu news

81 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஒப்புதல் தலா 25 லட்சம் 20கோடி ரூபா வழங்கும் லைக்கா சுபாஷ்கரன் !

கைதிகள்

சமீபத்தில் லண்டன் வந்த ரணிலை, லைக்கா மோபைல் நிறுவுனர் சுபாஷ்கரன் அவர்கள் சந்தித்தார். இதனை அடுத்து பொங்கல் அன்று 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளார்கள். முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், வெறும் கைகளோடு வீட்டுக்குப் போகக் கூடாது. அவர்கள் இனியாவது நன்றாக வாழவேண்டும் என்று கருதிய திரு சுபாஷ்கரன் அவர்கள்,  தலா 25 லட்சத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த வியாழன் அன்று(03) கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் வழங்கினார் சுபாஷ்கரன். அதனைத் தொடர்ந்து விடுதலையாகும் ஒவ்வொரு அரசியல் கைதிகளுக்கும், தலா 25 லட்சம் வழங்க உள்ளதாக, சுபாஷ்கரன் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார். இதனூடாக, சுமார் 20 கோடி ரூபாவை அவர் தமிழ் கைதிகளுக்கு வழங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அன்றைய தினம், காசோலையை பிரித்துப் பார்த்த பல அரசியல் கைதிகள் அழுது விட்டார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை என்று, தெரிவித்தார்கள். இவர்களில் சிலருக்கு 200 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது பலருக்கு தெரியாத விடையம்..

மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து இலங்கை ஜனாதிபதி ..ரணிலை சுபாஷ்கரன் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்தார்கள். இதனூடாக மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ரணில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஒட்டு மொத்தமாக 81,  அதாவது அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாக உள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் முதலீடு தேவையா ? அப்படி என்றால் தமிழர்கள் தரப்பு சொல்வதை சற்று கவனியுங்கள், என்ற திட்டவட்டமான செய்தியை சுபாஷ்கரன் அவர்கள் கொடுத்துள்ளார். இதுவரை காலமும் அவர் பெரும் தொழில் அதிபர், வணிகம் தெரிந்தவர் என்று மட்டும் தான் பேசப்பட்டு வந்தது. ஆனால் ..

தற்போது பெரும் அரசியல் காய் நகர்தலிலும் சுபாஷ்கரன் அவர்கள் வெற்றி பெற்று உள்ளார். தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நல்ல திட்டங்களை, அவர் இலங்கையில் மேற்கொள்ள இருக்கிறார். ஈழத் தமிழர்கள், அனைவரும் அவரை நன்றிக் கரங்களால் பற்றி நிற்கிறார்கள். இலங்கை சிறையில் இனி தமிழ் அரசியல் கைதிகள் இருக்க கூடாது. அதுவே முடிவான முடிவு என்று செயல்பட்டு வரும் சுபாஷ்கரன் கரங்களை நாம் பலப்படுத்துவோம்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்