வடிவேலு ஜோடியாக நடிக்க உள்ள 90ஸ் ஹீரோயின் நடிகை!

வடிவேலு ஜோடியாக நடிக்க உள்ள 90ஸ் ஹீரோயின் நடிகை!

மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98 ஆவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்க உள்ளார். இவர் திலீப் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான வில்லாலி வீரன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் 80 களிலும் 90 களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்த அவருக்கு இந்த படவாய்ப்பு ஒரு ரி எண்ட்ரியாக அமையும் என சொல்லப்படுகிறது.