மீசாலை வடக்கில் டெங்கினால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய பாலகன் உயிரிழந்துள்ளாா். கொடிகாமம் மீசாலை வடக்கைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளாா்.

கடந்த 6 நாள்களாக காய்ச்சல் காரணமாக குழந்தைக்கு ஆயுள்வேத வைத்தியம் செய்தபின் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணிக்கு சாவச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா். மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு பாலகன் மாற்றப்பட்டாா்.

எனினும் பாலகன் சிகிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் காரணமாகவே பாலகனின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us