வயதில் மூத்த பெண்ணுடன் குடித்தனம்! கட்டிவைத்து கல்லால் அடித்து கொடூரம்!

இந்த செய்தியை பகிருங்கள்

வயதில் மூத்த பெண்ணுடன் குடித்தனம் நடத்திய இளைஞரை கட்டி வைத்து கல்லால் அடித்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலை கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டியை சேர்ந்த தன்ராஜ் என்ற வாலிபர் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார். இங்கே நிலம் வாங்கி தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்திருக்கிறார். பாலம்மாள் என்ற 50 வயது கணவரை இழந்த பெண் அங்கு வேலை செய்து வந்துள்ளார்.

அந்த பெண்ணிற்கும் தன்ராஜ்க்கும் இடையே தொடர்பு உருவாகி இருவரும் கணவன் -மனைவி போல் மூன்று வருடமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இவர்களின் இந்த உறவுக்கு பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்திருக்கிறார்கள். எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து தான் இருவரும் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடந்திருக்கிறது. மது போதையில் இருந்த பெண்ணின் தம்பியும் அவரின் நண்பர்களும் சேர்ந்து திட்டி இருக்கிறார்கள். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட போது தன்ராஜை கைற்றால் கட்டி கல்லால் கொடூரமாக அடித்து தாக்கியிருக்கிறார்கள். இதை பார்த்த அந்த பெண்ணும் அப்பகுதியினரும் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தன்ராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இளைஞர் தன்ராஜை நான்கு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாலு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்கள் பிடிக்க தேடி வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us