கத்திமுனையில் பெண்னை நிர்வாணமாக நிற்கவைத்து படமெடுத்த சென்னை கல்லூரி மாணவர்

இந்த செய்தியை பகிருங்கள்

 

கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் அந்த பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து படம் எடுத்து ,அவரின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு தப்பித்துச் சென்ற சென்னை கல்லூரி மாணவர் போலீசில் பிடிபட்டுள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் 43 வயதான அந்த பெண், திருவல்லிக்கேணியில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார் . ஒப்பந்த அடிப்படையில் அவர் தினமும் சென்று வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கடந்த 20ஆம் தேதி அன்று வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார் .

அவரை யாரென்று விசாரித்துக் கொண்டு அருகே சென்ற போது சட்டென்று கத்தியை காட்டி மிரட்டி வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த பெண்ணால் சத்தம் போட முடியவில்லை . அதன்பின்னர் கத்தி முனையில் மிரட்டி நிர்வாணமாக பெண்ணை நிற்க வைத்து படம் எடுத்து இருக்கிறார். அதன் பின்னர் அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறார்.

நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அன்று இரவு அந்த நபர் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு என்னை பற்றி போலீஸில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஆனால் நடந்த சம்பவத்தை சொல்லாமல் இருந்தால் அந்த இளைஞரால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த அந்த பெண் தனது மகளிடம் முதலில் சொல்லி அழுது இருக்கிறார்.

நேற்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் தனது தாய்க்கு ஏற்பட்ட நிலைமை குறித்து அவரது மகள் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடி வந்ததில் அந்த இளைஞரை மெரினா பீச்சில் கைது செய்தனர். அவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த விஷால் என்கிற 20 வயது இளைஞர் என்பதும், பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us