‘உள் விவகாரங்களில் தலையிடாதீங்க!’ – ஜோ பைடனுக்கு சீனா பதிலடி!

இந்த செய்தியை பகிருங்கள்

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது

அண்டை நாடான சீனாவில், கடந்த 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் என்ற தனி நாடு உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அது மட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். ஜப்பான் நாட்டிற்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் பேசிய அவர் “சீனா ஆபத்துடன் விளையாடுகிறது. ‘ஒன் சீனா’ கொள்கையில் நாங்கள் உடன்பட்டு கையெழுத்திட்டோம். ஆனால் தைவான் படை எடுப்பால் கைப்பற்றப்படலாம் என்ற எண்ணம் பொருத்தமானதல்ல” தெரிவித்தார்.

தைவான் சீனாவின் எல்லையில் பிரிக்க முடியாத பகுதியாகும். தைவான் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள் விவகாரம்” என்று அவர் கூறினார். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் முக்கிய நலன்களைத் தொடும் பிரச்னைகளில், சீனா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீன மக்களின் உறுதியான தீர்மானம், உறுதியான விருப்பம் மற்றும் வலுவான திறனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us