21வது திருத்தச் சட்டம்: இரட்டை குடி உரிமை உள்ளவர்கள் அரசியலில் இருக்க முடியாது: பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது என்ன ?

இந்த செய்தியை பகிருங்கள்

பாராளுமன்றில் நேற்றைய தினம் 21வது திருத்தச் சட்டம் எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சி தரப்பால் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சரத்துக்களின் அடிப்படையில், ஜனாதிபதிக்கு உள்ள எல்லைகள் அற்ற அதிகாரங்களை நீக்கி. அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது போக இரட்டை குடி உரிமை உள்ள, எந்த ஒரு பிரஜையும் MP யாக இருக்க முடியாது. மேலும் அரசியலில் அவர் ஈடுபடவும் முடியாது என்ற சரத்தையும் சேர்த்துள்ளார்கள். இதில் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க பிரஜாவுரிமை உள்ளது என்பது பலர் அறிந்த விடையம். அதனால் இந்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேறினால். கோட்டபாயவை இலகுவாக வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று எதிர்கட்சிகள் கணக்குப் போட்டு உள்ளார்கள். ஆனால் நாட்டின் நிலை காரணமாக 2024 அதாவது இன்னும் 2 வருடங்களுக்கு தேர்தல் இல்லை என கோட்டபாய அறிவிக்க உள்ளார். அதன் அடிப்படையில்…

இன்னும் 2 வருடங்களுக்கு கோட்டபாயவே ஜனாதிபதியாகவும் இருப்பார். இந்த கால கட்டத்தில் நாட்டில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போக வைத்து. ராஜபக்ஷர்களையும் காப்பாற்றி , கோட்டபாய கையேற்றுவார் என்று எதிர்பார்கப்படுகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us